ஆலோசகர்

என்னை பற்றி
செல்வி.சோ.உலகம்மாள் எம்.காம்., M.Com., M.Ed., M.Phil., D.Co.Op., PGDCA., M.Sc Counselling & Psychotherapy.
சென்னையில் உள்ள ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ் அகாடமியில் 14 ஆண்டுகளாக கல்வி ஆலோசனை மற்றும் வழிகாட்டலோடு, நிர்வாக பணியில் இருந்து நல்ல அனுபவம் பெற்ற அடிப்படையில், 2015 முதல், பள்ளி மாணவர்களுக்கு இப்போது வரை கல்வி ஆலோசனை வழங்கி வருகிறேன்.
கல்வி ஆலோசனை வழங்குவது தொடர்பாக பெருநகர சென்னை மாநகராட்சி, கல்வி ஆணையர் அவர்களிடம், 15.07.2016 அன்று முதல் செயல்முறை ஆணை ஒற்றினை பெற்று, மாநகராட்சிப் பள்ளிகளுக்கு செல்ல ஆரம்பித்தேன். 2016ல் வழிகாட்டல் ஆணை பெறுவதற்கு முன்பே 2015லிருந்து ஆரம்பித்த மாணவ/மாணவியர் வழிகாட்டல் மற்றும் ஆலோசனை கொரோனா பெருந்தொற்று முன்புவரை சுமாராக 200 பள்ளிகளுக்கு நேரில் சென்று ஏறத்தாழ 25500 மாணவ/மாணவியருக்கு ஆலோசனை வழங்கியுள்ளேன்.
கேந்திரிய வித்யாலயா பள்ளியில் ஆலோசனை, வழிகாட்டலுக்கான ஆணை பெற்று, 16 பள்ளிகளுப் பெற்று, அதில் 6 பள்ளிகளுக்கு மட்டுமே சென்று, ஏறத்தாழ 400 மாணவ/மாணவியரைச் சந்தித்துள்ளேன்.
சென்னை மட்டுமன்றி வெவ்வேறு ஊர்களிலுள்ள கல்லூரிகளுக்கும் நேரில் சென்று உயர் கல்வி குறித்தும் உளவியல் ரீதியான ஆலோசனைகளும், வழிகாட்டலும் செய்து வருகிறேன்.
JEO பணிக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட வேலைவாய்ப்பு அலுவலருக்கு, அவர்களின் பயிற்சியின் போது உரையாற்றும் வாய்ப்பினை 2016 முதல் பெற்றுவருகிறேன். சான்றிதழும் பெற்றுள்ளேன். அத்தோடு, வேலைவாய்ப்பு திறன் மேம்பாட்டு கழகம் ஏற்பாடு செய்யும் போட்டித்தேர்வுக்கு தயாராகும் மாணவ/மாணவியருக்கு ஆலோசனை மற்றும் வழிகாட்டலும் தொடர்ந்து செய்து வருகிறேன்.
தமிழ்நாடு காவலர் நிறைவாழ்வு “முதன்மை பயிற்சியாளராக” பணிபுரிந்ததோடு, கொரோனா தொற்றுக்காலத்தில் கைபேசியில் காவலர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு உளவியல் ஆலோசனையுடன், தேவையான உதவிகளை துறை உயர் அதிகாரிகள் மூலம் நிறைவேற்றிக் கொடுக்கும் பணியினையும் செய்தேன். அதற்கான சான்றிதழும் பெற்றுள்ளேன்.
பல்வேறு தன்னார்வ தொண்டு நிறுவனங்களுடன் பல பணிகள் ஆற்றுவதுடன், சென்னை லயோலா கல்லூரி அவுட் ரீச் மாணவர்களுடன் பல்வேறு இடங்களுக்குச் சென்று பெண்களுக்கான விழிப்புணர்வுடன், பெண்களுக்கான உளவியல் ஆலோசனை, முதியோர் இல்லமும் சென்று ஊக்க உரையாற்றி வருகிறேன்.
கொரோனா தொற்றுக் காலத்திலும், பல்வேறு கல்லூரிகள், பள்ளிகள், வேலைவாய்ப்பு மையம், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் நிகழ்த்தும் நிகழ்வுகளில் பங்கெடுத்து ஆன்லைனில் உயர்கல்வி, உளவியல் ஆலோசனை வழங்கி வருகிறேன். பல மாவட்டங்கள், பல மாநிலங்கள், பல நாடுகளில் உள்ள பல்லாயிரக்கணக்கான மக்களையும், பல்வேறு நிகழ்வுகளில் சந்தித்து வருகிறேன்.
மைல்கற்கள்
- 02.02.2017 அன்று காது கேளாதோர் பள்ளி 30 ஆசிரியர்களிடையே அவர்கள் பணியினை உற்சாமாமூட்டும் வகையில் ஆலோசனை வழங்கும் நிகழ்வு.
- 10.03.2017 காது கேளாதோர் பள்ளி மாணவ/மாணவியர்களிடமும் அறநெறி குறித்து ஆலோசனை வழங்கும் நிகழ்வு.
- 22.06.2017, கோட்டூர்புரம், பார்வையற்றோருக்கான செயிண்ட் லூயிஸ் பள்ளிக்குச் சென்று மாணவர்களுக்கான வழிகாட்டலுடன், 10 & 12 வகுப்பு பொதுத் தேர்வுக்கு தயாராவது குறித்த ஆலோசனை வழங்கினேன். அத்தோடு அவர்களுக்குத் தேவையான ஒலி புத்தகங்களையும் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் பதிவு செய்து கொண்டு போய் கொடுத்தேன்.
உளி விழுந்த கல்
கல்வி என்பது ஒரு கருவியே, அதனை நாம் எப்படி பயன்படுத்துகிறோம் என்பதில் தான் நாம் கற்ற கல்வியை நாமும், நம்மைப் பற்றி மற்றவர்களும் அறிந்து கொள்ள முடியும். பொதுவாக எல்லோருக்கும் ஒரு கேள்வி வரும். “என்னால்/இவளால்/இவனால் முடியுமா?” என்பதுதான் அந்த கேள்வி.ஆனால் அந்த கேள்விக்கு பதிலாய் , “முடியும்” என்று மாணவ/மாணவியரைச் சொல்ல வைக்க /செயல்படுத்த முடியும் என்ற நம்பிக்கையோடு கல்லூரி காலங்களிலேயே துவங்கியது என் கல்விப் பணி. அப்பொழுதிலிருந்து பெற்றுக் கொண்டிருக்கும் அனுபவத்தையும், எனக்கு கல்வியின் மீது இருந்த ஆர்வத்தையும், எதையாவது சாதிக்க வேண்டும் என்ற மனப்பான்மையும், இன்றைய தலைமுறையின் இதயத்தில் விதைப்பதைக் குறிக்கோளாக கொண்டு இயங்கி வருகிறேன். IAS, IPS & TNPSC, SSC, ரயில்வேத்துறை, மற்றும் வங்கித் தேர்விற்கு தயாராகும் ஆர்வலர்களுக்கும் (Aspirants) அரசுப் பணியில் கொட்டிக் கிடைக்கும் வாய்ப்பினை அறியா அரசுப் பள்ளி, மாநகராட்சிப் பள்ளி, கேந்திரிய வித்யாலயா பள்ளி, கல்லூரியில் பயிலும் மாணவ/மாணவியருக்கும் நேரில் சென்று உரையாற்றி ஆலோசனையும், வழிகாட்டலும் செய்து வருகிறேன். வருங்கால இளைய சமுதாயம் தான் செய்யும் செயலை அறிந்து செய்ய, வழிகாட்டுவதே என் நோக்கம். அத்தோடு, எதிர்கொள்ளும் பிரச்சினைகளை உளவியல் ரீதியாகவும் எதிர்கொண்டு, சமாளித்து, வெற்றி கொள்வதற்கான வழிமுறைகள் குறித்தும் விழிப்புணர்வு பெறச் செய்வதுவும் தலையாய குறிக்கோள்.

காணொளி
காண்க
பணிகள்/பயணங்கள்
நெல்லை சீமையில் சிறு வயதில் அப்பா முதன் முதலில் துவங்கிய “திருவள்ளுவர் நர்சரி” பள்ளியில் வேர் விட ஆரம்பித்த ஆர்வம் கல்லூரிக் காலங்களில் கல்விப் பயணமாக, தொடர்ந்து, கல்லூரி முடித்து வீட்டிற்கு வந்ததும் மாலை முழுவதுவும் அரசுப் பள்ளி மாணவ/மாணவியருக்கு பாடம் சொல்லிக் கொடுப்பது (டியூஷன்), அவர்களுக்கான கல்விச் சிக்கலைத் தீர்ப்பது, பெற்றோர்களுக்கான சிக்கல்களை ஆலோசித்து, வழிகாட்டுவது என நான் பிறந்த திருநெல்வேலி மண்ணில் தொடர்ந்தது.
2001ல் நெல்லையை விட்டு சென்னைக்கு வருவேன் என்று எண்ணியதே இல்லை. விபத்து போல சென்னை வந்த போது குடிமைப்பணிக்கு விண்ணப்பித்து, அதற்கான வகுப்புகளில் சேர்ந்து படிக்கச் சென்ற நான், வகுப்புகள் முடிந்து மற்ற நேரங்களில் அந்த நிறுவனத்தின் மேலாண்மைப் பணிகளுடன், கல்வி ஆலோசனை வழங்கவும் ஆரம்பித்து பின் அதுவே என் முழு நேர பணியாக மாறியது. பணி நேரத்திலோ, அல்லது பணிக்குப் பின்னர் எப்பொழுது வேண்டுமானாலும் மாணவ/மாணவியர் (UPSC) தங்களுக்குத் தேவைப்படும் கல்வி தொடர்பான உதவிகள் எதுவானாலும் தொடர்பு கொள்ளலாம் என்பதே என் அடையாளமாகியது.
2001லிருந்து 2014 வரை,14 வருட ஐஏஎஸ், ஐபிஎஸ் கல்வி நிறுவன வேலையில் என்னை தேடி தான் மாணவ மாணவியர் வந்தார்கள் .இந்த முறையில் என்னால் ஒரு சிறிய பிரிவு என்ற அளவிலேயே உதவிகள் செய்ய முடிந்தது. மேலும் இப்படி வருபவர்கள் அனைவரும் கல்லூரி படிப்பை முடித்தவர்கள். இதற்கு பதிலாய் நாமே மாணவ மாணவியரை அவர்கள் இருக்கும் இடத்திற்கே தேடி சென்றால் இன்னும் நிறைய பேருக்கு உதவ முடியும் என்ற எண்ணம் தோன்றியது மேலும் பள்ளி அளவிலான மாணாக்கர்களையம் என் பயணத்தில் இணைத்து கொண்டால் அவர்கள் தேர்ந்து எடுக்கும் பாதையில் ஒரு தெளிவையும், புரிதலையும் ஏற்படுத்த முடியும் என்ற நம்பிக்கை பிறந்தது. எனவே 2014 ல் நிறுவன வேலையிலிருந்து விடுபட்டு மாணாக்கர்களை நேரில் சந்திக்கும் கல்விப் பணியை தொடர முடிவெடுத்தேன்.
இவ்வாறு வெளியில் செல்ல ஆரம்பித்த பின்தான் மாணவர்கள் மற்றும் முதியவர்கள், மாற்று திறனாளிகள் போன்ற பிற பிரிவினருக்கும் உளவியல் ரீதியான ஆலோசனையும் வழி காட்டுதலும் தேவை என புரிந்தது.
எனவே அவர்களையும் என் பயணத்தில் இணைத்துக் கொள்ள முடிவு எடுத்தேன்.
நர்சரி பள்ளி குழந்தைகள், நடுநிலைப் பள்ளி குழந்தைகள், உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளி, கலை மற்றும் அறிவியல் கல்லூரி, பொறியியல் கல்லூரி, மருத்துவ கல்லூரி, குழந்தைகள் இல்லம், முதியோர் இல்லம், காது கேளாதோர் மற்றும் பார்வையற்றோர் நிறுவனம், இல்லத்தரசிகளுக்கான நிகழ்வுகள், வேலைவாய்ப்பு மற்றும் திறன்மேம்பாடு மையம், தொழில்துறை பயிற்சி நிறுவனம் (ITI), குடிசை மாற்று மக்கள் குடியிருப்பு, காவலர் நிறைவாழ்வுப் பயிற்சி (மாஸ்டர் டிரெய்னர்) என பயணித்துக் கொண்டே இருக்கிறேன்.
பல இடங்களுக்கு பயணிப்பதுவும், மக்களைப் படிப்பதுவும் எனக்கு மிகவும் பிடித்தமானது. கடைசி மூச்சு இருக்கும் வரை கற்ற கல்வியை பலருக்கும் பயன்படும் வகையில், கல்வி மற்றும் உளவியல் ரீதியாக கொண்டு செல்ல வேண்டுமென்பது எனது பேரார்வம்…
என்ன பயிற்றுவிக்கிறேன் என் மாணவர்களுக்கு?

திறன் மேன்பாடு

சுயசார்பு

உளவியல்

நாட்டு நடப்பு
மேற்கோள்கள்
மற்றவரின் அறிதலில்
நம் புரிதலை
உருவாக்கும் களம்…
திருக்குறளின்
ஒன்றறை அடியில் அடங்காதவன்
ஏழரையில் மாட்டிக் கொள்வான்...
மனநிலைக்குத் தகுந்தாற் போல்
பேசி விடாதீர்கள். மனநிலை மாறலாம். ஆனால் பேசிய வார்த்தை மாறாது...
பிடி அவலுக்கு பெருமாளை
அடிமையாக்க நினைத்தால் முடியாது. பிடித்தமானவனாக மட்டுமே முடியும்...
சிறியவர்களுக்கு படிப்பும், பெரியவர்களுக்கு படிப்பினைகளும் பாடமாய்...
அப்துல்கலாம்…
சிந்தனையே சிந்திக்கும் சிந்தனையாளர்...

விருதுகள்
- மகளிர் தின கொண்டாட்டம், அடைக்கலம் அறக்கட்டளை, முதன்மை விருந்தினர் (29.03.2015)
ஜெம்ஸ் ஆஃப் திஷா விருது (26.07.2015) - மாதவரத்தில், மார்ச் மாதத்தில், சிற்பி எனும் அமைப்பு “மகளிர் தினம்” விழாவில் என்னை “தைரியமான, வீர மங்கையாக” (Brave Lady) கவுரவித்து விருது வழங்கினார்கள் (15.03.2017)
- முகநூலில் அமுதசுரபி என்று ஒரு பக்கம் உள்ளது அதில் நடுவராக பல பட்டிமன்றங்களில் விவாதித்திருக்கிறேன் அதற்காக மூன்றாம் ஆண்டுவிழாவில் “அமுத பட்டிமன்ற விருது” மற்றும் அந்த ஆண்டின் “இரும்புப் பெண்மணி” விருதும் வழங்கி கவுரவித்தது (30.04.2017)
- ஊருணி அறக்கட்டளை “பாத் பிரேக்கர்” விருது (03.03.2018)
- பூவரசி அமைப்பின் “நம்பிக்கை” விருது (18.08.2019)
- S2S அமைப்பின் “சமூகச் சிற்பி” விருது (05.09.2020)
- கலாம் யு.வி. அறக்கட்டளை “பாராட்டு விருதுகள்” (21.11.2020)
- இந்தியன் உலக சாதனைகள் – சிறந்த மனிதநேய விருது “(01.01.2021)
- சூப்பர் ராயல் டிவி விருது – 2021, சிறந்த கல்வியாளர் & ஆலோசகர் (23.03.2021)
- காவல்துறை பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கு ஆலோசனை வழங்குவதற்கான பாராட்டு சான்றிதழ். (01.05.2021)
- கலங்கரை விளக்கம் அறக்கட்டளை, காருண்யம் அறக்கட்டளை, கவித்திறன் மேடை இணைந்து பத்மஸ்ரீ விவேக் நினைவகா “கலைச்செல்வர் விருது” (09.05.2021)
- “ஆரஞ்சு உலக சாதனை சான்றிதழ்” பதின்பருவ சவால்கள்” தலைப்பில் ஆற்றிய உரைக்காக (12.07.2021)
- ஷாக்ஷம் “டைனமிக் கேரியர் கவுன்சிலர்” விருது (17.09.2021)
- தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ், “பெண்மையை” கொண்டாடுதல் மற்றும் கௌரவித்தல், ஸ்ரீமதி சோனியா காந்தி விருதுகள்-2022 (09.03.2022)
- சிரம் அறக்கட்டளை, கெளரவ விருந்தினர் (13.03.2022)
- தங்க மங்கை விருது – 2022, தமிழ் இணைவோம்-உலகத் தமிழ் பேரியக்கம் (15.03.2022)
சமீபத்திய பதிவுகள்
நான் பற்றி ஏறத்தாழ 13 கல்லூரிகளிலும் 6 பள்ளிகளிலும் உரையாற்றி இருக்கிறேன்.
பள்ளி மாணவர்களும்
திறன் பயிற்சியும்
ஏறத்தாழ 14000 மாணவ/மாணவியர், 13 கல்லூரிகளிலும், 6 கேந்திரிய வித்யாலயா பள்ளிகளிலும், தனியார் பள்ளிகள் தவிர்த்து, கிட்டத்தட்ட 200 அரசு மற்றும் மாநகராட்சிப் பள்ளிகளில் உரையாற்றி இருக்கிறேன். என் உரை வாயிலாக மாணவர்கள் தங்கள் கல்வியுடன், வாழ்க்கைக்குத் தேவையான அனுபவங்களை பயன்படுத்துவது குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துவது தேவயான ஒன்று என்று நான் கருதி, அதன் மூலம் மாணவ/மாணவியரின், தனித்திறனையும் ஆளுமையையும் வளர்க்க முடியும் என்று கருதுகிறேன்.
இன்றைய சூழலில், அனைத்து மாணவ/மாணவியருக்கும், புத்தகக் கல்வியைத் தாண்டி, உளவியல் கல்வி குறித்தும், பாலியல் கல்வி குறித்தும், தெளிவு தேவை என்று நம்புகிறேன். சிந்தனையிலும், செயலிலும் தெளிவு பெற்றாலே ஒரு மனிதன் ஆளுமைத்திறன் வெளிப்படச் செய்யமுடியும்.
கல்வியே ஒருவனை பண்படுத்தி, சிறந்த ஆளுமையாக்க உதவுகிறது. ஆகையால் மதிப்பெண்களோடு கூடிய ஆளுமைத்திறனையும் வளர்ப்பது இன்றியமையாதது. தலைமைப் பண்பு அனைவரிடமும் உள்ளது, ஆனால் வெளிப்படுத்தும் விதத்திலேயே ஆளுமையை மற்றவர் அறியச்செய்ய முடிகிறது.
மற்றவருடன் உரையாடும் திறன், பிரச்சனைகளை எதிர்கொள்ளும் திறன், பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் திறன், முடிவெடுத்தல் திறன் ஆகியவற்றிலுள்ள சிக்கல்களை புரிய வைப்பதற்கான வழிகாட்டுதலோடு, நடைமுறை வாழ்க்கைக்குத் தேவையானவற்றை மாணவர்களுக்கு அவர்களுக்கு புரியும் வகையில் கதைகள் மூலமும், சம்பவங்கள் மூலமும் கண்ணியமாய் எடுத்துரைக்கிறேன்.
அறநெறி (Ethics) என்பது ஒவ்வொரு தனி மனித வாழ்விலும் மிக முக்கியம். அதனைக் கடைபிடித்தாலே, ஒரு தனி மனிதனாக தான் யார்? என்ன செய்ய வேண்டும்? எதற்குச் செய்ய வேண்டும்? தனிமனித பொறுப்புகள், குடும்பத்திற்கான பொறுப்புகள், சமூகத்திற்கான பொறுப்புகள் என்ன? என்று அனைத்தையும் அறிந்து ஆற்ற வேண்டிய கடமைகளை அறநெறியுடன் ஆற்ற முடியும் என்று மாணவர்கள் புரிந்து கொள்ளச் செய்வதன் மூலம் தனித்தன்மையை முழுமையாக வெளிப்படச் செய்யலாம்.
இது போன்ற வாழ்க்கை கல்வி சார்ந்த பயிற்சி ஒரு மாணவரை நல்ல மனிதராக தனித்திறமையுடன் முதிர்ச்சி அடைந்த மனிதனாக மற்றவர்களும் அறிந்துகொள்ளச் செய்யும் என்றும் நம்புகிறேன்.

அறிவு வேட்கையும் வெகுஜன மாணவனும்.
இன்றைய பாடத்திட்டத்தில் மாணவர்களுக்கு தேவையான வழிகாட்டுதலும் உற்சாகமூட்டும் உந்துதலும் குன்றியிருப்பதாக நான் உணர்கிறேன். அதை முக்கியமாக கிராமப்புற மாணவருக்கும் உலகம் அறிந்திராதவர்களுக்கும் அள்ளி கொடுப்பதை என் கடமையாய் கொண்டு பணி செய்கிறேன்.

உலகம்மாள், கல்வி ஆலோசகர்
போட்டி தேர்வுகளுக்கும் அன்றாட நிகழ்வுகளும்
இரண்டு வருடங்கள் போட்டி தேர்வுகள் எழுதியதாலும், 14 வருடங்களாய் UPSC, TNPSC தேர்வுக்குக்கான பயிற்சி மையங்களில் பணியாற்றியதாலும் அவற்றை பற்றிய புரிதல் உண்டு. அன்றாட நிகழ்வுகளை தொகுப்பதும் தெரிய படுத்துவதும் என் பொழு போக்கு.
கூறிய நுண்ணறிவும் கருத்து குவியல்களை தேடி படிக்கும் ஆர்வமும் மிகுந்தவர்களுக்கு இது போன்ற தேர்வுகளில் ஒரு சாதகமுண்டு. இவற்றை கொண்ட பிள்ளைகளுக்காக பல துணுக்கு செய்திகளை தொகுத்து, சேகரித்து அவற்றை ஞாபகம் வைத்து கொள்வது எளிதானது.
என்னால் அவர்களுக்கு முடிந்ததை செய்ய இத்தகைய தொகுப்புகளை சேகரித்து அவற்றை பகிர்வதை எனது பொழுது போக்காக கொண்டுள்ளேன். இதனால் என் பொது அறிவும் வளர்வது நெல்லுக்கு பாய்ச்சும் நீர் புல்லுக்கும் பாய்வது போன்றது தானோ?