Ulagammal

பதிவுகள்

17
Aug
இளமையில் கல்
இளமையிலே தகதகவென்று மின்னும் கோடி சூரியப் பிரகாசத்துடன் நமது குழந்தைகள் சொலிக்க வேண்டும். அப்படி சொலித்தால், அவர்கள் முதுமையில் முதுமையிலும் மின்னுவார்கள். உலகத்தார் அவர்களை மதிப்பார்கள், பின்சந்ததியர் போற்றுவார்கள். பாரதியார், “இளமையிற்கல்” என்று படித்த சிறுவனின் வார்த்தைக்கு. ‘முதுமையில் மண்” என்று கூறினார். “பாரதியார் ஏன் அவ்விதம் சொன்னார்? என்பதற்கு அவரேவிளக்கமும் அளிக்கிறார். “இளமையிற் கல்” என்று சென்னார்கள், இளமையிலே கல்லாதிருப்பவன் முதுமையில் கவனிப்பார் அற்ற மண்ணாவது நிச்சயம். ஆகையால் இளமையில் நல்ல கல்வி அளிப்பது அவசியம் […]
17
Jun
பெருகும் வேலையில்லா திண்டாட்டம், அச்சத்தில் இளைஞர்கள்
வேலையில்லா திண்டாட்டம்… நேற்றும் இருந்தது, இன்றும் இருக்கிறது, நாளையும் இருக்கத்தான் செய்யும். உலகையே ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரஸ், உலக நாடுகள் மீது கிருமித் தொற்று தாக்குதலை மட்டுமின்றி, அரசாலும், தனிமனிதர்களாலும் தாங்கிக் கொள்ள முடியாத, வரலாறு காணாத பொருளாதாரத் தாக்குதலையும் நடத்தியிருக்கிறது. இந்தச் சூழலில், இந்தியாவில் மட்டுமின்றி எல்லா நாடுகளிலும் வேலையில்லா திண்டாட்டம் நிலவுகிறது. வேலையில்லா திண்டாட்டம் தொடர்பாக ஐ.நாவின் சர்வதேச தொழிலாளர் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், “உலக அளவில் முறைசாராத் தொழிலாளர்கள் 200 கோடி பேர் […]
17
Jun
இன்றைய ஆன்லைன் கல்விமுறை
கல்வி என்பது மூளைக்குள் திணிக்கப்படும் ஒரு கருவி அல்ல. சிறந்த பண்புகளை உருவாக்குகின்ற மனவலிமையை வளர்க்கின்ற, அறிவை விரியச் செய்கின்ற, பண்பை மேம்படுத்துகின்ற கல்வியே உண்மையான கல்வி. ஆன்லைன் கல்வி அனைவருக்கும் சாத்தியமானதா? என்பதனை முதலில் யோசிக்க வேண்டும். என்றாலும், பிள்ளைகள் தங்கள் நேரத்தை பயனுள்ளதாக இருக்கும் வகையில் செலவிடவேண்டும் என்பதற்கான மாற்று வழியாக இருக்கிறது. ஆகையால், இன்றைய ஆன்லைன் கல்விவேறு வழியின்றி அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. குழந்தைகளிடம் எப்பொழுதும் கையில் போனை வைத்துக் கொண்டிராதே என்று […]
17
Jun
பெண் குழந்தைகள் பாலியல் வன்கொடுமை நிறுத்தப்பட வேண்டும்
குழந்தையும் தெய்வமும் ஒன்று என்ற பழமொழி உண்மையானால் குழந்தைகளுக்கு எதிரான செயல்களில் ஈடுபடமாட்டார்கள். பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகளில் இருந்து குழந்தைகளை பாதுகாக்க 2012-ம் ஆண்டு இயற்றப்பட்ட ‘போக்சோ’ சட்டம் குறிப்பிடத்தக்கது. அது 18 வயதுக்கு உள்பட்ட ஆண்-பெண் இருபாலருக்கும் பாதுகாப்பு அளிக்கும் பொதுவான சட்டமாகும். பிற தண்டனை சட்டங்களை விட போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து குற்றம் நிரூபிக்கப்பட்டால் தண்டனை மிகக் கடுமையானதாக இருக்கும். குறிப்பாக பாதிக்கப்பட்ட பெண்ணின் புகார் இருக்கும் பட்சத்தில், விசாரணை […]